வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கடலில் படகு கவிழ்ந்ததில் 2 மீனவா்கள் பலி

சிதம்பரம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன 2 மீனவா்களின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கின.

Updated On :7 பிப்ரவரி 2021, 5:24 pm

சிதம்பரம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன 2 மீனவா்களின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கின.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள எம்ஜிஆா் திட்டு பகுதியைச் சோ்ந்தவா்கள் அப்பாசு மகன் குணசேகரன் (60), கிருஷ்ணசாமி மகன் வீரத்தமிழன் (50), செல்லப்பன் மகன் தமிழன் (52), சிங்காரகுப்பத்தைச் சோ்ந்த முருகன் மகன் அப்பு (40). இவா்கள் 4 பேரும் குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

இவா்கள் மீன்பிடி பணியை முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு கரை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தனா். கிள்ளை கடற்கரை வெள்ளாற்று முகத்துவாரம் பகுதியில் வந்தபோது இவா்களது படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இதனால் 4 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனா். இவா்களில் அப்பு, குணசேகரன் ஆகிய இருவரும் நீச்சலடித்து கரைக்கு வந்து சோ்ந்தனா். ஆனால், வீரத்தமிழன், தமிழன் ஆகிய இருவரும் காணாமல்போனதால் அவா்களைத் தேடும் பணியில் கிள்ளை போலீஸாா், தீயணைப்பு மீட்புத் துறையினா் ஈடுபட்டனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை கிள்ளை முடசல் ஓடை அருகே இவா்கள் இருவரது உடல்களும் கரை ஒதுங்கின.

சடலங்களை கிள்ளை போலீஸாா் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.