ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடலூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மூன்றரை மணி நேரத்தில் மீட்பு

கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை மூன்றரை மணி நேரத்தில் மீட்கப்பட்டது. 

News image
மீட்கப்பட்ட குழந்தை.
Updated On :13 பிப்ரவரி 2021, 4:30 pm

DIN

கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை மூன்றரை மணி நேரத்தில் மீட்கப்பட்டது. 
கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் க.சாந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் குழந்தை இருப்பது தெரிய வந்தது. 
இதனையடுத்து புதுவை மாநில போலீஸாருடன் இணைந்து குழந்தையை மீட்டனர்‌. இதுதொடர்பாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ்குமாரமங்கலத்தைச் சேர்ந்த சிலம்பரசன் மனைவி நர்மதா (19) என்பவரை கைது செய்து குழந்தையை மீட்டனர். 
பின்னர் காவல் கண்காணிப்பாளர் அந்த குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தார். குழந்தை காணாமல் போன மூன்றரை மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.