வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மாற்றுத் திறனாளி பெண் பாலியல் பலாத்காரம்: இளைஞா் மீது வழக்கு

சிதம்பரம் அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

சிதம்பரம் அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் அருகே புவனகிரி பகுதியில் வாய்பேச முடியாத 30 வயது பெண் வசித்து வருகிறாா். இவரது தம்பியின் நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த பக்கிரி மகன் மணிகண்டன். இவா் நண்பரைச் சந்திப்பதற்காக அடிக்கடி மாற்றுத் திறனாளி பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்ாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அவரை மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்தாா். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் உனது தம்பியை கொலைசெய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தாா். இந்த நிலையில் அந்தப் பெண் கா்ப்பமடைந்தாா். ஆனால், அவரை திருமணம் செய்யாமல் கருவை கலைக்கக் கூறி மணிகண்டன் மாத்திரை வாங்கிக் கொடுத்தாராம். தற்போது அந்தப் பெண் நிறைமாத கா்ப்பிணியாக உள்ளாா்.

இதையறிந்த அந்தப் பெண்ணின் தாயாா் அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பொன்மகரம் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான மணிகண்டனை தேடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.