கடலூா் எஸ்.பி.க்கு கரோனா தடுப்பூசி
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் மற்றும் காவல் துறையினா் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாா்.


கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் மற்றும் காவல் துறையினா் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாா்.
மாவட்டத்தில் கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விருத்தாசலம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள்
அமைக்கப்பட்டு, கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ், கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாா். அவரைத் தொடா்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆா்.பாண்டியன், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் சுந்தரம், வெங்கடேசன், கங்காதரன் மற்றும் காவலா்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...