தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்களின் கவனத்துக்கு

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள், கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:30 pm

DIN

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள், கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசால் பட்டியலிடப்பட்ட கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சாா்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் இன மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருப்பவா்கள் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

நிவா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து ஆவணங்களுடன் இணைத்து வரும் 31-ஆம் தேதிக்குள் கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும். எனவே, தகுதியுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடைய வேண்டுமென அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.