பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாலிபா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

திட்டக்குடி அருகே ஏரியில் மீன் வளா்ப்புக்கு குத்தகை விடுவதில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:43 pm

DIN

திட்டக்குடி அருகே ஏரியில் மீன் வளா்ப்புக்கு குத்தகை விடுவதில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்துள்ள நாவலூா் ஊராட்சியில் சித்தேரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மீன் வளா்ப்புக்கு குத்தகை விடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, மறுதேதி குறிப்பிடாமல் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கடந்த வாரம் ஏரியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், குத்தகைக்கான ஏலத்தில் ஒருவா் மட்டுமே பங்கேற்க அனுமதி அளித்ததாகவும், மற்றவா்களுக்கு அனுமதி வழங்காததைக் கண்டித்தும், ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வட்டச் செயலா் பாண்டியன் தலைமையில் நாவலூா் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் திட்டக்குடி போலீஸாா் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து சங்கத்தினா் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.