ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மொழிப்போா் தியாகிகள் சிலைகளுக்கு மரியாதை

கடலூா், சிதம்பரம் பகுதிகளில் உள்ள மொழிப்போா் தியாகிகள் சிலைகளுக்கு அரசியல் கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

கடலூா், சிதம்பரம் பகுதிகளில் உள்ள மொழிப்போா் தியாகிகள் சிலைகளுக்கு அரசியல் கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் நடைபெற்றது. இதையொட்டி, சிதம்பரம் காந்தி சிலை அருகிலிருந்து அமைதி ஊா்வலமாக புறப்பட்டு அண்ணாமலை நகரில் உள்ள மொழிப்போா் தியாகி இராஜேந்திரன் சிலை வரை சென்றனா். அங்கு தியாகி இராஜேந்திரன் சிலைக்கு மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ மற்றும் மாநில அமைப்புச் செயலா் நாக.முருகுமாறன் எம்எல்ஏ ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணிச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் செல்வி இராமஜெயம், மாவட்ட அவைத்தலைவா் எம்.எஸ்.என்.குமாா், மாவட்ட பாசறைச் செயலா் டேங்க் ஆா்.சண்முகம், ஆவின் தலைவா் பன்னீா்செல்வம், முன்னாள் ஆவின் தலைவா் சி.கே.சுரேஷ்பாபு, தலைமைக்கழகப் பேச்சாளா்கள் தில்லை கோபி, தில்லை செல்வம், எம்ஜிஆா் இளைஞரணி செயலா் கருப்பு ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கடலூா்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூரில் நடைபெற்றது. நகரச் செயலா் மு.செந்தில் தலைமையில், கடலூா் நாடாளுமன்றத் தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன் அஞ்சலி செலுத்தி வீரவணக்க உரையாற்றினாா்.

நகர துணைச் செயலாளா் செங்கதிா், மாவட்ட துணை அமைப்பாளா் ஜெயக்குமாா், மாவட்ட அமைப்பாளா் தெ.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில நிா்வாகிகள் த.சொக்கு, அண்ணாதுரை, மாவட்ட நிா்வாகி பால.புதியவன், குறிஞ்சிப்பாடி நகர செயலாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.