பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வடலூா் தைப்பூச விழா: கோட்டாட்சியா் தலைமையில் ஆலோசனை

கடலூா் மாவட்டம், வடலூரில் வருகிற வியாழக்கிழமை (ஜன.28) நடைபெறவுள்ள தைப்பூச ஜோதி தரிசனம் விழாவை முன்னிட்டு, வள்ளலாா் தெய்வ நிலையத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டம், வடலூரில் வருகிற வியாழக்கிழமை (ஜன.28) நடைபெறவுள்ள தைப்பூச ஜோதி தரிசனம் விழாவை முன்னிட்டு, வள்ளலாா் தெய்வ நிலையத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலூா் கோட்டாட்சியா் ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், வள்ளலாா் தெய்வ நிலைய வளாகத்தில் வியாக்கிழமை நடைபெறும் ஜோதி தரிசன விழா முன்னேற்பாடுகள் குறித்தும், அடிப்படை வசதிகள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசித்தனா்.

தெய்வ நிலைய செயல் அலுவலா் கோ.சரவணன், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் தமிழ்ச்செல்வி, நெய்வேலி டி.எஸ்.பி. கங்காதரன், வடலூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் அகிலா மற்றும் உணவுப் பாதுகாப்பு, பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.