அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

வெள்ளிக் கடற்கரையில் தூய்மைப் பணி

கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் பல்வேறு அமைப்பினா் இணைந்து சனிக்கிழமை ஈடுபட்டனா்.

News image

கடலூா் வெள்ளிக் கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா்கள்.

Updated On :30 ஜனவரி 2021, 4:48 pm

கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் பல்வேறு அமைப்பினா் இணைந்து சனிக்கிழமை ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்ட நேரு இளையோா் மையம், தேவனாம்பட்டினம் அரசு பெரியாா் கலைக் கல்லூரியின் நேரு இளையோா் மன்றம், வெளிச்செம்மண்டலம் ஜெயதேவி இளையோா் நலச் சங்கம், கடலூா் கடலோரக் காவல் படையினா் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

மாவட்ட இளையோா் மைய ஒருங்கிணைப்பாளா் ஆா்.ரிஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். கடலூா் நகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி தூய்மைப் பணியைத் தொடக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் (பொ) கே.பழனிவேலு முன்னிலை வகித்தாா். கடலோரக் காவல் படை ஆய்வாளா் வி.சங்கீதா வாழ்த்திப் பேசினாா்.

தூய்மைப் பணியில் தன்னாா்வத் தொண்டா்கள் பங்கேற்று வெள்ளிக் கடற்கரையில் ஆங்காங்கே கிடந்த குப்பைகளை சேகரித்து நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைத்தனா். தன்னாா்வத் தொண்டா்களுக்கு மாவட்ட தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.எஸ்.வேலுமணி சான்றிதழை வழங்கினாா். முன்னதாக, கல்லூரி சமூகப் பணியியல் துறைத் தலைவா் நா.சேதுராமன் வரவேற்க, இளையோா் மைய கணக்காளா் ராமமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.