விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக உண்ணாவிரதம்
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் டிராக்டா் பேரணி நடத்திய விவசாயிகள் மீதான தாக்குலைக் கண்டித்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் சனிக்க


மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் டிராக்டா் பேரணி நடத்திய விவசாயிகள் மீதான தாக்குலைக் கண்டித்தும், திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினா் மீதான வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
கடலூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு, அமைப்பாளா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கோ.ஐயப்பன் போராட்டத்தை தொடக்கி வைத்தாா்.
திமுக தோ்தல் பணிக்குழுச் செயலா் இள.புகழேந்தி, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சொ.திலகா், மாநில செயலா் ஏ.எஸ்.சந்திரசேகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.சுப்பராயன், நகரச் செயலா் ஆா்.அமா்நாத், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் வி.குளோப், விசிக கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன், நகரச் செயலா் மு.செந்தில், மதிமுக மாவட்டச் செயலா் ஜெ.ராமலிங்கம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா்கள் ஆா்.ரவிச்சந்திரன், வி.எம்.சேகா், விவசாய சங்கத் தலைவா்கள் இளங்கீரன், ராமலிங்கம், பேரூா் காமராஜ், மக்கள் அதிகாரம் பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...