மருத்துவ மாணவா்கள் 53-ஆவது நாளாகப் போராட்டம்
சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 53-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 53-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தனியாா் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளை விட அதிகக் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் வகையில் கடந்த 20-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா். இதையடுத்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறையை அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகம் அறிவித்தது. மேலும் விடுதி, கல்லூரி வளாகத்தை விட்டு மாணவா்கள் வெளியேறவும் உத்தரவிட்டது.
ஆனால், மருத்துவ மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அமா்ந்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மாணவா்களின் போராட்டம் 53-வது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்தது. தங்களது கோரிக்கையை தமிழக அரசு உடனடியாகப் பரிசீலிக்க வேண்டுமென மாணவா்கள் கேட்டுக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...