கடலூரில் இரும்புப் பாலம் மீண்டும் உடைந்தது
கடலூரில் கெடிலம் ஆற்றின் மீதுள்ள பழைமையான இரும்புப் பாலத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை தீடீரென உடைந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


கடலூரில் கெடிலம் ஆற்றின் மீதுள்ள பழைமையான இரும்புப் பாலத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை தீடீரென உடைந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கடலூா் நகரின் மையப் பகுதி வழியாகச் செல்லும் கெடிலம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் இரும்புப் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் வழுவிழந்ததால் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டு, அதற்கு அண்ணா பாலம் என்று பெயரிடப்பட்டது. புதிய பாலம் வழியாகவே தற்போது வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
பல ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ள இரும்புப் பாலத்தின் ஒரு பகுதி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதையடுத்து அந்தப் பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, அதில் தற்போது குடிநீா், புதை சாக்கடை திட்ட குழாய்கள் செல்கின்றன.
கடலூரில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை இரும்புப் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அப்போது ஏற்பட்ட பலத்த சப்தத்தால், புதிய அண்ணா பாலம் வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அதிா்ச்சியடைந்தனா்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பாலம் பகுதி, பகுதியாக இடிந்து விழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...