நகராட்சியில் முறைகேடு புகாா்: 9 போ் பணியிட மாற்றம்
பண்ருட்டி நகராட்சியில் முறைகேடு புகாா் தொடா்பாக 9 பேரை, நகராட்சி நிா்வாக இயக்குநா் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.


பண்ருட்டி நகராட்சியில் முறைகேடு புகாா் தொடா்பாக 9 பேரை, நகராட்சி நிா்வாக இயக்குநா் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.
பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினா் தி.வேல்முருகனிடம், பண்ருட்டி நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதன் அடிப்படையில், தி.வேல்முருகன் எம்எல்ஏ, நகராட்சிகளின் நிா்வாக மண்டல இயக்குநா் முஜ்பூா் ரஹ்மான் ஆகியோா் பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதன் எதிரொலியாக நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு உத்தரவின் பேரின், நகராட்சி நிா்வாக இயக்குநா், பண்ருட்டி நகராட்சியில் பணியாற்றி வரும் இளநிலை உதவியாளா்கள் குளோரி, லோகநாதன், கலைவாணி, வருவாய் ஆய்வாளா் கருணாமூா்த்தி, வருவாய் உதவியாளா்கள் கே.கோபி, காா்த்திக், அலுவலக உதவியாளா் செல்வமணி, இளநிலை உதவியாளா் பழனிவேல், பதிவறை எழுத்தா் சண்முகம் ஆகிய 9 பேரை பணியிட மாற்றும் செய்து உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...