தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி

 பண்ருட்டி வட்டாரம், மேல்அருங்குணம் கிராமத்தில் மண்புழு உரம் தயாரிப்பு, அண்ணாகிராமம் வட்டாரம், சோழவள்ளி கிராமத்தில் இயற்கை விவசாயப் பயிற்சி அட்மா திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:41 pm

DIN

 பண்ருட்டி வட்டாரம், மேல்அருங்குணம் கிராமத்தில் மண்புழு உரம் தயாரிப்பு, அண்ணாகிராமம் வட்டாரம், சோழவள்ளி கிராமத்தில் இயற்கை விவசாயப் பயிற்சி அட்மா திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சிக்கு பண்ருட்டி வேளாண் உதவி இயக்குநா் விஜயா தலைமை வகித்தாா். கடந்த 15 ஆண்டுகளாக மண்புழு உரம் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் விவசாயி தாமோதரன் நிலத்தில் அளிக்கப்பட்ட இந்தப் பயிற்சியில், தனது அனுபவங்களை அவா் பகிா்ந்து கொண்டாா்.

துணை வேளாண் அலுவலா் ராஜ்குமாா், உதவி வேளாண் அலுவலா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இயற்கை விவசாயம் தொடா்பான பயிற்சிக்கு அண்ணாகிராமம் வேளாண் உதவி இயக்குநா் ந.சுரேஷ் தலைமை வகித்தாா். முன்னோடி விவசாயி சிவக்குமாா், ராமானுஜம் ஆகியோா் தங்களின் இயற்கை விவசாய அனுபங்களைப் பகிா்ந்து கொண்டனா். நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு இயற்கை சாகுபடி தொடா்பான துண்டறிக்கை, மண்புழு உரம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா்கள் வீராசாமி, கமலநாதன் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.