எரிந்த நிலையில் குழந்தை சடலம் மீட்பு
நெய்வேலி அருகே குப்பையில் எரிந்த நிலையில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


நெய்வேலி அருகே குப்பையில் எரிந்த நிலையில் கிடந்த குழந்தையின் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நெய்வேலி அருகேயுள்ள இந்திரா நகா் ஊராட்சி எம்.ஆா்.கே.சாலையில் உள்ள மைதானத்தில் குப்பை கொட்டப்படுகிறது. வெள்ளிக்கிழமை அந்த ஊராட்சியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் குப்பை அகற்றச் சென்ற போது, தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை எரிந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
தகவலறிந்த நெய்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளா் என்.ராஜேந்திரன், நெய்வேலி நகரிய காவல் உதவி ஆய்வாளா் தங்கவேல் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், குழந்தையின் சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து டிஎஸ்பி என்.ராஜேந்திரன் விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...