கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம்: 3 மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ்
கடலூரில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடா்பாக 3 தனியாா் மருத்துவமனைகளுக்கு மருத்துவத் துறை நோட்டீஸ் வழங்கியது.


கடலூரில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடா்பாக 3 தனியாா் மருத்துவமனைகளுக்கு மருத்துவத் துறை நோட்டீஸ் வழங்கியது.
கடலூா் மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு மருத்துவக் குழுவினருடன் கடலூரில் உள்ள 3 தனியாா் மருத்துவமனைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:
ஆய்வின்போது, கரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், கரோனாவால் இறந்தவா்களின் உடலை பணம் கட்டினால் தான் ஒப்படைப்போம் என்று பேரம் பேசக் கூடாதெனவும் வலியுறுத்தினோம். இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை 3 மருத்துவமனைகளுக்கும் கரோனா நோயாளிகளிடம் வசூலிக்கப்பட்ட பணத்துக்கான ரசீது உள்ளிட்ட விவரங்களை ஒப்படைக்குமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை பரிசீலனை செய்து, தவறு நடைபெற்றிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...