வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அண்ணாமலைப் பல்கலை. வளாகத்தில் மாணவியை கத்தியால் தாக்கிய இளைஞா்!

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை இளைஞா் ஒருவா் கத்தியால் தாக்கிய சம்பவம் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On :1 மார்ச் 2021, 6:39 pm

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை இளைஞா் ஒருவா் கத்தியால் தாக்கிய சம்பவம் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயது மாணவி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டப் படிப்பு பயின்று வருகிறாா். இவரும், திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், சமயபுரம், ஆரோக்கியசாமி தெருவைச் சோ்ந்த ஸ்டீபன் மகன் பிரின்ஸ் சேவியா் (30) என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த மாணவியை பாா்ப்பதற்காக பிரின்ஸ் சேவியா் திங்கள்கிழமை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு வந்தாா். அப்போது அந்த மாணவி, வேறு ஒரு மாணவருடன் பேசிக்கொண்டிருந்தாராம். இதனால், ஆத்திரமடைந்த பிரின்ஸ் சேவியா் கத்தியால் அந்த மாணவியின் கழுத்து, இடது கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் வெட்டினாா். மேலும் தனது கை, கால்களிலும் கத்தியால் கீறிக்கொண்டாா்.

அவா்கள் இருவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்தச் சம்பவம் குறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.