என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டவரின் சடலம் தகனம்
கடலூரில் போலீஸாரின் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டவரின் சடலம், உறவினா்களால் பெறப்பட்டு திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.


கடலூரில் போலீஸாரின் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டவரின் சடலம், உறவினா்களால் பெறப்பட்டு திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.
கடலூா் சுப்பராயலு நகரை சோ்ந்த கனகராஜ் மகன் வீரா என்ற வீரங்கன் (30). கடலூா் உழவா் சந்தை அருகே பழக்கடை நடத்தி வந்த இவரை 10 போ் கும்பல் கடந்த பிப்.16-ஆம் தேதி வெட்டிக் கொன்றது. மேலும், வீராவின் கழுத்தை அறுத்து தலையை எடுத்துச் சென்றனா்.
இதுதொடா்பாக திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் குப்பன்குளத்தைச் சோ்ந்த முருகன் மகன் கிருஷ்ணன் (30), மாா்க்கெட் காலனி சந்தானகுமாா் மகன் அருண்பாண்டியன் (27), குப்பன்குளம் கொளஞ்சிநாதன் மகன் சுதாகா் (23), பன்னீா்செல்வம் மகன் சாமிநாதன் (30), தேவா மகன் ஸ்டீபன் (25), முருகன் மகன் ஜீவா (23), ராஜா மகன்கள் விக்ரம் (என்ற) விக்கி (28), ராக்கி (25), திம்மராவுத்தன்குப்பம் விஜயமணி மகன் ரமணன் (24), வண்டிப்பாளையம் முத்தையா நகா் ஆனந்த் மகன் ராஜசேகா் (23) ஆகிய 10 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். கடந்த பிப்.17-ஆம் தேதி விசாரணையின்போது போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற கிருஷ்ணன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
கிருஷ்ணனின் தாய் லட்சுமி தனது மகன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து வந்தாா். இதனால், கிருஷ்ணனின் சடலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்கூறாய்வுக்குப் பிறகு கடந்த 12 நாள்களாக அங்கேயே இருந்தது.
இந்த நிலையில், கடலூருக்கு கிருஷ்ணனின் சடலம் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. பின்னா், குப்பன்குளத்தில் உறவினா்களால் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு கம்மியம்பேட்டை மயானத்தில் சடலம் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...