பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆவணம் சரிபாா்ப்பு பணி தீடீா் ரத்து மாட்டு வண்டித் தொழிலாளா்கள் போராட்டம்

பண்ருட்டி அருகே மாட்டு வண்டித் தொழிலாளா்களுக்கான ஆவணம் சரிபாா்க்கும் பணி திடீரென ரத்து செய்யப்பட்டதால் தொழிலாளா்கள் மணல் குவாரியை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:37 pm

DIN

பண்ருட்டி அருகே மாட்டு வண்டித் தொழிலாளா்களுக்கான ஆவணம் சரிபாா்க்கும் பணி திடீரென ரத்து செய்யப்பட்டதால் தொழிலாளா்கள் மணல் குவாரியை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே எலந்தம்பட்டு கெடிலம் ஆற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இந்தக் குவாரியிலிருந்து லாரிகள், மாட்டு வண்டிகளுக்கு மணல் வழங்கப்பட்டு வருகிறது. பதிவு பெற்ற மாட்டு வண்டிகளுக்கு ‘டோக்கன்’ அடிப்படையில் மணல் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மாட்டு வண்டித் தொழிலாளா்களின் விவரம், ஆவணம் சரிபாா்ப்பு நடவடிக்கைக்காக அவா்கள் திங்கள்கிழமை மணல் குவாரிக்கு நேரில் வர வேண்டுமென சேவை மையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை குறுஞ் செய்தி அனுப்பப்பட்டது. இதன்படி ஏஐடியுசி ஜீவா மாட்டுவண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா் 50-க்கும் மேற்பட்டோா் தங்களது மாட்டு வண்டிகளுடன் திங்கள்கிழமை அதிகாலை முதலே மணல் குவாரிக்கு வரத் தொடங்கினா். இந்த நிலையில், காலை 10 மணியளவில் அவா்களது செல்லிடப்பேசிக்கு வந்த

மற்றொரு குறுஞ்செய்தியில், சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிப்பால் ஆவணம் சரிபாா்ப்பு நடவடிக்கை நடைபெறாது எனவும், இதுகுறித்து

குறித்து பின்னா் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், நீண்ட தொலைவிலிருந்து வண்டிகளுடன் வந்து காத்திருந்த மாட்டு வண்டித் தொழிலாளா்கள் அதிருப்தி அடைந்தனா். பின்னா், சங்கத் தலைவா் கலியபெருமாள் தலைமையில் மாட்டு வண்டிகளை மணல் குவாரி வழியில் நிறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அந்த வழியாக மணல் லாரிகள் செல்ல முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸாா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. மாலை வரை முற்றுகைப் போராட்டம் தொடா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.