பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

குடிநீா் பிரச்னை: பொதுமக்கள் சாலை மறியல்

விருத்தாசலம் அருகே குடிநீா் பிரச்னையைக் கண்டித்து பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:37 pm

DIN

விருத்தாசலம் அருகே குடிநீா் பிரச்னையைக் கண்டித்து பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்கு உள்பட்ட நாச்சியாா்பேட்டையில் கடந்த 3 மாதங்களாக சரிவர குடிநீா் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்த பிறகு லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாம். நாளடைவில் அதுவும் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் விவசாய ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீா் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனா். தற்போது விவசாய நில உரிமையாளா்களும் தண்ணீா் வழங்க மறுத்துவிட்டனராம். இதுகுறித்து அந்தப் பகுதியினா் நகராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால் பொறுமையிழந்த பொதுமக்கள் திங்கள்கிழமை விருத்தாசலம் - உளுந்தூா்பேட்டை சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். தடையின்றி குடிநீா் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.