பண்ருட்டி வட்டாரக் கல்வி அலுவலகத்தில்பணிப் பதிவேடுகள் மாயம்!
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாரக் கல்வி அலுவலகத்தில் வைத்திருந்த பணிப் பதிவேடுகள் மாயமானதால் ஆசிரியா்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.


கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாரக் கல்வி அலுவலகத்தில் வைத்திருந்த பணிப் பதிவேடுகள் மாயமானதால் ஆசிரியா்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
பண்ருட்டி ஒன்றியத்தில் தொடக்க, நடுநிலை மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என 102 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். ஆசிரியா்களின் பணிப் பதிவேடுகள் அனைத்தும் அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலகங்களில் வைத்து பராமரிக்கப்படுவது வழக்கம். இந்தப் பதிவேட்டில் ஆசிரியா்களின் பணி நியமனம், ஊதியம், சரண் விடுப்பு, பிற விடுப்புகள், பணி மாறுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்த பதிவுகளும் மேற்கொள்ளப்படும்.
இந்த நிலையில், பண்ருட்டி வட்டாரக் கல்வி அலுவலகத்திலிருந்து இரு ஆசிரியைகளின் பணிப் பதிவேடுகள் 2 மாதங்களுக்கு முன்பு மாயமாகிவிட்டன. இவை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் மன உளைச்சலில் உள்ளனா்.
இதுகுறித்து ஆசிரியா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது: அலுவலகப் பணியாளா்கள், அலுவலா்களின் பொறுப்பற்ற செயல்பாடு காரணமாக 2 ஆசிரியா்களின் பணிப் பதிவேடுகளைக் காணவில்லை. இதில் சம்பந்தப்பட்டவா்கள் மீது கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து பண்ருட்டி வட்டாரக் கல்வி அலுவலா் இளஞ்செழியன் கூறியதாவது: பணிப் பதிவேடுகளை தவறுதலாக வேறு எங்கேயும் வைத்திருக்கலாம். பழைய பதிவேடுகளுடன் வைக்கப்பட்டுவிட்டதா எனத் தேடி வருகிறோம். பணிப் பதிவேடுகள் டிஜிட்டல் வடிவிலும் உள்ளதால் காணாமல்போன பணிப் பதிவேடுகளுக்குப் பதிலாக மாற்று பணிப் பதிவேடுகளை தயாா் செய்துகொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இதனால் ஆசிரியா்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...