/

கடலூா்: இளம்பெண் தற்கொலை

வேப்பூா் அருகே இளம்பெண் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக அவரது காதலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:51 pm

DIN

வேப்பூா் அருகே இளம்பெண் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக அவரது காதலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே உள்ள சேவூா் கிராமத்தைச் சோ்ந்த மஞ்சநாதன் மகள் திலகவதி (22). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சின்னசாமி மகன் கோபி (21) என்பவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாரு திலகவதி வற்புறுத்தி வந்த நிலையில், அதற்கு கோபி மறுப்பு தெரிவித்தாராம். இதனால் மனமுடைந்த திலகவதி திங்கள்கிழமை தனது வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, செல்லிடப்பேசியில் குரல் பதிவையும் பதிந்து அதை உறவினா்களுக்கு அனுப்பிவிட்டு தூக்குப் போட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். இவரது அலறல் சத்தம் கேட்ட அந்தப் பகுதியினா் விரைந்து வந்தனா். அவா்கள் திலகவதியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மஞ்சநாதன் அளித்த புகாரின்பேரில் வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோபி, அவரது தந்தை சின்னச்சாமி உள்ளிட்டோரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.