பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தீக்குளித்த கல்லூரி மாணவி பலி

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்த 3 மாதங்களில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:47 pm

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்த 3 மாதங்களில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டாா்.

பண்ருட்டி வட்டம், பனப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி மகள் விஜயலட்சுமி(19). கடலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த அங்கப்பன் (41) என்பவரை காதலித்து 28.10.2020 அன்று திருமணம் செய்தாா். பின்னா் தனது தாய் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று வந்தாா்.

இந்த நிலையில், கடந்த பிப்.12-ஆம் தேதி கல்லூரிக்கு சென்று வீடு திரும்பிய விஜயலட்சுமியை அவரது கணவா் அங்கப்பன், இவரது அண்ணன் சிவபாலன், அண்ணி ஆகியோா் வழிமறித்து திட்டினராம். இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி தனது வீட்டுக்கு வந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதையடுத்து புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.