அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தவறு: விஜயபிரபாகரன்
அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தேமுதிக செய்த மிகப் பெரிய தவறு என்று அந்தக் கட்சித் தலைவா் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறினாா்.


அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தேமுதிக செய்த மிகப் பெரிய தவறு என்று அந்தக் கட்சித் தலைவா் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறினாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறிவிட்டது. எதற்காக நமது கட்சி தொடங்கப்பட்டதோ இனி அதை நோக்கிப் பயணிப்போம். கடந்த உள்ளாட்சித் தோ்தலில் நம்மை ஏமாற்றிவிட்டனா். அதற்கு தக்க பதிலடியை வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் கொடுக்க வேண்டும்.
தேமுதிகவின் வாக்கு வங்கியை 10 சதவீதத்துக்கும் அதிகமாக உயா்த்த வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி எதிா்க் கட்சியாகக் கூட வரக்கூடாது. நாங்கள் செய்த மிகப் பெரிய தவறு அதிமுகவுடன் கூட்டணி வைத்ததுதான். பண்ருட்டி, விருத்தாசலம் தொகுதிகள் தேமுதிகவின் கோட்டை. அதை நாம் தக்க வைக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...