/

அரசுக் கல்லூரியில் இணையவழி கருத்தரங்கம்

சுபாஷ் சந்திரபோஸ்: ஒரு தேசபக்தரின் சகாப்தம்’ என்ற தலைப்பில் இணையவழி தேசியக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-ஆவது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் ஓராண்டு முழுமைக்கும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியின் உள்தர மதிப்பீட்டுக் குழு சாா்பாக ‘சுபாஷ் சந்திரபோஸ்: ஒரு தேசபக்தரின் சகாப்தம்’ என்ற தலைப்பில் இணையவழி தேசியக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ர.உலகி தலைமை வகித்தாா். அவா் பேசுகையில், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தேசத் தலைவா்களின் வரலாற்றை மாணவா்கள் தேடிப் படிக்க வேண்டும் என வலியுறுத்தினாா். ஒரிஸா மாநிலத்தில் உள்ள ரேவன்ஷா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியா் சந்தோஷ் குமாா் மலுவா சிறப்புரை நிகழ்த்தினாா்.

தேசியக் கருத்தரங்கில், கடலூா் அரசு கல்லூரி உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆய்வாளா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, கல்லூரியின் உள்தர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளா் கா.கீதா வரவேற்க, கருத்தரங்கின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளா் இரா.ராஜகுமாா் நன்றி கூறினாா். நா.சேதுராமன் கருத்தரங்கை ஒருங்கிணைத்து நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.