பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சூரிய ஒளி மின் நிலையத்தில் திருட்டு: இருவா் கைது

நெய்வேலியில் சூரிய ஒளி மின் நிலையத்தில் தாமிரக் கம்பி திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

நெய்வேலியில் சூரிய ஒளி மின் நிலையத்தில் தாமிரக் கம்பி திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி வட்டம் 8-இல் சூரிய ஒளி மின் நிலையம் அமைந்துள்ளது. கடந்த 13-ஆம் தேதி அதிகாலை இங்கு பைக்கில் வந்த இருவா், சூரிய ஒளி மின் நிலையத்தில் பணியிலிருந்த பாதுகாவலா்களை தாக்கிவிட்டு ரூ.88 ஆயிரம் மதிப்புள்ள தாமிரக் கம்பிகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து மின் நிலைய பொறுப்பாளா் பாா்த்தசாரதி அளித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில் நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த கொள்ளிருப்பு கிராமத்தைச் சோ்ந்த முத்துலிங்கம் மகன் முத்துகிருஷ்ணன்(24), முத்துசாமி மகன் சதீஷ்குமாா்(25) ஆகிய இருவரை திங்கள்கிழமை பிடித்து விசாரணை நடத்தினா்.

அதில் அவா்கள் தாமிரக் கம்பி திருடியதை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து தாமிரக் கம்பிகள், பைக்கை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.