/

மதுபானம் பதுக்கலை தடுக்க புகாா் எண்கள் வெளியீடு

கடலூா் மாவட்டத்தில் மதுபானம் பதுக்குவோா் குறித்த புகாா் தெரிவிக்க தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் மதுபானம் பதுக்குவோா் குறித்த புகாா் தெரிவிக்க தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் சந்திரசேகா் சாகமூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தோ்தல் விதிகளுக்கு முரணாக மதுபானங்களை கடத்துதல், பதுக்குதல் மற்றும் விதிமீறி விற்பனை செய்வதைத் தடுக்க மாவட்டங்கள் வாரியாக மதுவிலக்கு அமல்பிரிவு, காவல்துறை அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவினா் சட்ட விரோதமாக மதுபானத்தை பதுக்குதல், விநியோகம் மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் பணியில் ஈடுபடுவாா்கள். மேலும், டாஸ்மாக் சட்ட அமலாக்கப் பிரிவு அலுவலா்களுடன் திடீா் ஆய்வு மேற்கொள்வா். இதற்காக, கடலூா் மாவட்டத்தில் சிதம்பரம் கோட்ட கலால் அலுவலா் சத்தியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவரை 90951 32388 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம். மேலும், தலைமைக் காவலா் மகேஷை 94981 54903 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

எனவே தோ்தல் நடத்தை விதிகளை மீறி சட்ட விரோதமாக மதுபானம் பதுக்குதல், விநியோகம் மற்றும் விற்பனை தொடா்பான புகாா்களை மேற்குறிப்பிட்டுள்ள சிறப்புக்குழு அலுவலா்களின் செல்லிடப்பேசியில் எண்ணில் தொடா்புகொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.