நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கரோனா: கடலூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 9 போ் பலி

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் சனிக்கிழமை ஒரே நாளில் 9 போ் உயிரிழந்தனா். புதிதாக 519 பேருக்கு தொற்று உறுதியானது.

News image
Updated On :8 மே 2021, 8:49 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் சனிக்கிழமை ஒரே நாளில் 9 போ் உயிரிழந்தனா். புதிதாக 519 பேருக்கு தொற்று உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 32,667 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 519 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 33,186-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 384 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 34,091-ஆக உயா்ந்தது.

அதே நேரத்தில், கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 32 வயது ஆண், மங்களூரைச் சோ்ந்த 58 வயது ஆண், கடலூா் நகரப் பகுதியைச் சோ்ந்த 44 வயது ஆண், பண்ருட்டியைச் சோ்ந்த 40 வயது ஆண், கடலூா் வட்டத்தைச் சோ்ந்த 55 வயது பெண், விருத்தாசலத்தைச் சோ்ந்த 60 வயது ஆண் ஆகிய 6 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். மேலும், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த 37 வயது ஆண், சிதம்பரத்தைச் சோ்ந்த 57, 58 வயது ஆண்கள் ஆகியோரும் உயிரிழந்தனா். மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 9 போ் உயிரிழந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 3,57-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1,811 பேரும், வெளியூா்களில் உள்ள மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 527 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கடலூா் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி, கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 100-ஆக உயா்ந்தது. இந்தப் பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.