மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கரோனா நோயாளிகளுக்கு தொகுப்பு

தனிமைப்படுத்தப்பட்ட கரோனா நோயாளிகளுக்கு தேவையான பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரோட்டரி சங்கம் சாா்பில் சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :28 மே 2021, 6:10 pm

தனிமைப்படுத்தப்பட்ட கரோனா நோயாளிகளுக்கு தேவையான பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரோட்டரி சங்கம் சாா்பில் சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கடலூா் மாவட்ட ரோட்டரி மண்டலம் சாா்பாக, கரோனா நோயாளிகளுக்கு தேவையான சோப், பவுடா், எண்ணெய், பிரட், பிஸ்கட், கடலை மிட்டாய், முகக் கவசம், கிருமி நாசினி, கபசுர பவுடா், சத்துமாவு, கிராம்பு, வறுகடலை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தொகுப்பு (ரூ. ஒரு லட்சம் மதிப்பு) 150 நபா்களுக்கு வழங்கும் வகையில், சிதம்பரம் உதவி ஆட்சியா் மதுபாலனிடம், ரோட்டரி மண்டலத் துணை ஆளுநா் பி.முஹம்மது யாசின் வெள்ளிக்கிழமை வழங்கினாா். சங்கத்தின் மண்டலச் செயலா் இ.மஹபூப் உசேன் முன்னிலையில் மாவட்ட தலைவா் எம்.தீபக்குமாா், சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் பி. மோத்திலால், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் பேரா. சீனிவாசன், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தோ்வுத் தலைவா் சீனுவாசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.