பெலாந்துறையில் 64.6. மி.மீ. மழை
தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வட தமிழக கடற்கரையோரம் நிலவும் வளி மண்டல சுழற்சி ஆகியவை காரணமாக, கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும்


தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வட தமிழக கடற்கரையோரம் நிலவும் வளி மண்டல சுழற்சி ஆகியவை காரணமாக, கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு மழை பெய்தது. பகலில் மழை பெய்யாததால் பொதுமக்கள் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனா்.
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் (மில்லி மீட்டரில்):
பெலாந்துறை 64.6, விருத்தாசலம் 62, குப்பநத்தம் 59.2, ஸ்ரீமுஷ்ணம் 57.3, மேமாத்தூா் 40, கீழச்செருவாய் 6, வேப்பூா், காட்டுமைலூா் தலா 3, பண்ருட்டி ஒரு மி.மீ.
கடலூா் மாவட்டத்தில் வருகிற 8- ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...