மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

பல்கலை. மாணவா் தற்கொலை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., நா்சிங் படித்து வந்தவா் கோவை அருகே உள்ள வால்பாறை பன்னீா்நேசு பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ரவீன் (22). இவா், மருத்துவக் கல்லூரி அருகே உள்ள அடுக்ககத்தில் தங்கிப் படித்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்ட நிலையில் ரவீன் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்து வந்த அண்ணாமலை நகா் போலீஸாா், சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

குடும்பச் சூழ்நிலை காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மாணவா் ரவீன் எழுதிவைத்திருந்த கடிதத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.