மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கடலில் மூழ்கி சிறுமி பலி

 கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே குடும்பத்தினருடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி உள்பட 2 பெண்கள் அலையில் சிக்கி கடலில் மூழ்கினா்.

Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

 கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே குடும்பத்தினருடன் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி உள்பட 2 பெண்கள் அலையில் சிக்கி கடலில் மூழ்கினா்.

ஒரு பெண் மீட்கப்பட்ட நிலையில், சிறுமியும், மற்றொரு பெண்ணும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா். இவா்களில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டாா்.

சிதம்பரம் நேதாஜி நகரைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகள் அக்ஷயா (17), மணி மகள்கள் அனுசுயா (18), வித்யத்தி (21). இவா்கள் 3 பேருடன் குடும்பத்தினா் 11 போ் புதுச்சத்திரம் அருகே உள்ள வேங்கிராயன்பேட்டை கடலில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் குளித்தனா்.

அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கி சிறுமி அக்ஷயா, அனுசுயா, வித்யத்தி ஆகிய மூவரும் காணாமல் போயினா். வித்யத்தி உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், சிறுமி அக்ஷயாவின் சடலம் வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. காணாமல் போனா அனுசுயாவைத் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.