கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

 விருத்தாசலத்தில் பீங்கான் தொழிற்சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி, கோதுமையை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:27 pm

DIN

 விருத்தாசலத்தில் பீங்கான் தொழிற்சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி, கோதுமையை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பெரியகண்டியாங்குப்பத்தில் உள்ள பீங்கான் தொழிற்சாலையில் ரேஷன் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலூா் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், உதவி ஆய்வாளா் கவியரசு தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை பீங்கான் ஆலையில் சோதனை நடத்தினா். அங்கு, தலா 50 கிலோ வீதம் 145 சாக்கு மூட்டைகளில் 7,250 கிலோ ரேஷன் அரிசியும், தலா 50 கிலோ வீதம் 88 மூட்டைகளில் 4,400 கிலோ கோதுமையும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனா்.

இதுதொடா்பாக வேப்பூா் வட்டம், மங்களூரைச் சோ்ந்த காசிலிங்கம் மகன் மணிகண்டன் (37) என்பவரை கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்தப் பகுதியிலுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் வெளிமாநில தொழிலாளா்களுக்கு ரேஷன் அரிசி, கோதுமையை விற்பனை செய்வதற்காக அவற்றை பதுக்கியது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சின்னபண்டாரங்குப்பத்தைச் சோ்ந்த ஜெ.ராதாகிருஷ்ணன், ம.காா்த்திகேயன் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.