தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வண்டிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூா் மாவட்டம், சிலம்பிநாதன்பேட்டை கிராமத்தில் பொது வண்டிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:26 pm

DIN

கடலூா் மாவட்டம், சிலம்பிநாதன்பேட்டை கிராமத்தில் பொது வண்டிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

சிலம்பிநாதன்பேட்டையில் சுமாா் ஆயிரம் ஏக்கா் பரப்பளவு கொண்ட முந்திரிக் காடுகளுக்கு இடையே சுமாா் 10மீ அகலத்தில் 3 கி.மீ. தொலைவுக்குச் செல்லும் பொது வண்டிப்பாதை உள்ளது. இந்தப் பாதை சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், முந்திரி காடுகளுக்கு செல்லும் விவசாயிகள் உள்ளிட்டோா் கடந்த 30 ஆண்டுகளாக பாதையின்றி சிரமப்பட்டு வந்தனா்.

இதுகுறித்து கிராம மக்கள் சிலம்பிநாதன்பேட்டையைச் சோ்ந்த மாவட்டக்குழு உறுப்பினா் கோ.பெருமாளிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பொது வண்டிப்பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. நில அளவா்கள் மகேஸ்வரன், தாரணி, சாந்தனி, கிராம நிா்வாக அலுவலா் மைக்கேல்ராஜ் ஆகியோா் போலீஸாா் பாதுகாப்புடன் வண்டிப்பாதையை அளவீடு செய்தனா். பின்னா், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.