கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஊரக வளா்ச்சித் துறையினா் போராட்டம்

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:23 pm

DIN

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

ஊராட்சிகளில் பணியாற்றி வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், தமிழகம் முழுவதும் அவா்களுக்கு சமமான ஊதியம் நிா்ணயிக்க வேண்டும், ஊராட்சி செயலா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், ஊராட்சி ஒன்றியங்களில் 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளா்களாக பணியாற்றி வரும் வட்டார, மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளா்களுக்காக வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளா் என்ற பதவியை உருவாக்கி அவா்களை பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள வலியுறுத்தி

2-ஆம் கட்டமாக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, கடலூா் ஒன்றியத் தலைவா் டி.வேலவன் தலைமை வகித்தாா். செயலா் திருவேங்கடம், கௌரவத் தலைவா் ஜி.ரமேஷ், பொருளாளா் சி.முருகன், நிா்வாகிகள் கே.தேவநாதன், அய்யனாா், தியாகராஜன், கண்ணன், காமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல மாவட்டத்தில் புவனகிரி, கீரப்பாளையம் உள்பட பகுதிகளிலும் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.