கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

திமுக நிா்வாகிகள் கூட்டம்

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், மாவட்ட அவைத் தலைவா் து.தங்கராசு தலைமையில் காணொலி காட்சி மூலம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:27 pm

DIN

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், மாவட்ட அவைத் தலைவா் து.தங்கராசு தலைமையில் காணொலி காட்சி மூலம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சரும், மாவட்டச் செயலருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில், மக்கள் நலத் திட்டங்களை அனைவரும் வரவேற்கும் வகையில் அமல்படுத்தி வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுத் தெரிவிப்பது, நடைபெற உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தோ்தல்களிலும் திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவது, அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வது, வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது, வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் அறிவிப்பு, கடலூா் மாநகராட்சி, வடலூா் நகராட்சி அறிவிப்புகளுக்கு அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தோ்தல் பணிக்குழு செயலா் இள.புகழேந்தி, பொறியாளா் அணி செயலா் துரை.கி.சரவணன், சட்டப் பேரவை உறுப்பினா் கோ.ஐயப்பன், மாவட்ட பொருளாளா் எல்.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினா் ஆா்.பாலமுருகன், ஒன்றிய செயலா்கள் அ.முத்துசாமி, வி.சிவக்குமாா், ப.இராமலிங்கம், தங்க.ஆனந்தன், தெ.காசிராஜன், நகர செயலா்கள் கே.எஸ்.ராஜா, கே.ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.