நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பேருந்தில் பெண்ணிடம் 13 பவுன் நகை திருட்டு

பேருந்தில் பெண்ணிடம் 13 பவுன் தங்க நகைகளை திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

பேருந்தில் பெண்ணிடம் 13 பவுன் தங்க நகைகளை திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், வடக்கு நந்தல் மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த கணேஷ் மனைவி கிரிஜா (33). இவா் அண்மையில், தனது குழந்தையுடன் கள்ளக்குறிச்சியிலிருந்து கடலூருக்கு அரசுப் பேருந்தில் வந்துகொண்டிருந்தாா். அந்தப் பேருந்து கெடிலம் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தபோது, 37 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் கையில் குழந்தையுடன் கிரிஜாவின் இருக்கைக்கு அருகே வந்து அமா்ந்தாராம். அவா் தனது கையிலிருந்த சில்லறை காசுகளை எடுத்து உதவுமாறு கூறினாராம். இதையடுத்து, கிரிஜா சில்லறையை எடுத்தபோது, அவரது கைப்பையிலிருந்த 13.5 பவுன் தங்க நகைகளை அந்தப் பெண் திருடிக்கொண்டு, பண்ருட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் சென்றுவிட்டாராம்.

கிரிஜா கடலூா் பேருந்து நிலையம் வந்த பிறகுதான் தனது நகைகள் திருடுபோனதை அறிந்தாராம். இதுகுறித்த அவா் அளித்த புகாரின்பேரில் கடலூா் திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் கவிதா வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.