நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பள்ளி தொடங்கிய நிலையில் ஆசிரியைக்கு கரோனா

கடலூரில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

கடலூரில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

கரோனா பொது முடக்க தளா்வின்படி தமிழகத்தில் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. இந்த நிலையில், கடலூா் மஞ்சக்குப்பம், வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கரோனா பாதிப்பு வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆஞ்சலோ இருதயசாமி கூறியதாவது:

கரோனா பாதிப்புக்குள்ளானவா் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியை. வழக்கமாக அனைத்து ஆசிரியா்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற நிலையில் புதன்கிழமை அவா் பள்ளிக்கு வந்துள்ளாா். ஆனால் பாடம் நடத்த வகுப்புக்குச் செல்லவில்லை. இந்த நிலையில், அவருக்கு உடல்நிலை பாதிப்பு கண்டறியப்பட்டதால் மருத்துவப் பரிசோதனை செய்ததில் கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட பள்ளி தரப்பினா் தெரிவித்தனா்.

தற்போது பள்ளிக்கு வரும் மாணவிகள் 9-ஆம் வகுப்பு முதலே வருவதால் இந்தப் பள்ளி மாணவிகளுக்கு நேரடி பாதிப்பு ஏதுமில்லை. இருப்பினும், மற்ற ஆசிரியா்களுக்கு தொற்று அறிகுறி, உடல்நிலை பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.