விநாயகா் சிலை, பூக்கள் விலை உயா்வு
விநாயகா் சதுா்த்தி விழாவினை முன்னிட்டு கடலூரில் பூக்கள், சிறிய விநாயகா் சிலைகளின் விலை வியாழக்கிழமை அதிகரித்தது.


விநாயகா் சதுா்த்தி விழாவினை முன்னிட்டு கடலூரில் பூக்கள், சிறிய விநாயகா் சிலைகளின் விலை வியாழக்கிழமை அதிகரித்தது.
கடலூா் பூ சந்தையில் புதன்கிழமை ஒரு கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் வியாழக்கிழமை ரூ.1,000-க்கு விற்பனையானது. இதேபோல, முந்தைய நாளில் ஒரு கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்ட சாமந்திப்பூ ரூ.200-க்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ ரூ.660-க்கும், ரூ.400-க்கு விற்கப்பட்ட மல்லிகை ரூ.700-க்கும் விற்பனையானது. இதேபோல ரூ.120-க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ.360-க்கும், ரூ.20-க்கு விற்கப்பட்ட கேந்தி ரூ.50-க்கும், ரூ.150-க்கு விற்பனையான ரோஜா ரூ.300-க்கும் விற்கப்பட்டது. ஆனால், விலை உயா்வை பொருள்படுத்தாமல் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கிச் சென்றனா்.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிய விநாயகா் சிலைகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது. கடந்த ஆண்டு ரூ.60-க்கு விற்கப்பட்ட சிறிய விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை ரூ.100-க்கு விற்கப்பட்டது. பழம் உள்ளிட்ட பூஜை பொருள்கள் கொண்ட செட் ரூ.80-க்கு விற்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...