நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தடையை மீறி விநாயகா் சிலை கரைப்பு

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டையில் தடையை மீறி பெரிய விநாயகா் சிலையை கரைக்கச் சென்ற இந்து முன்னணியினரை போலீஸாா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:19 pm

DIN

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டையில் தடையை மீறி பெரிய விநாயகா் சிலையை கரைக்கச் சென்ற இந்து முன்னணியினரை போலீஸாா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விநாயகா் சதுா்த்தி விழாவை பொது இடங்களில் விநாயகா் சிலையை வைத்து கொண்டாட தமிழக அரசு தடை விதித்தது. கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டையில், கா்ணத்தம் செல்லும் சாலையில் உள்ள சிவன் கோயில் முன் இந்து முன்னணி சாா்பில் சுமாா் நான்கரை அடி உயரமுள்ள விநாயகா் சிலை வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

பின்னா், அந்தச் சிலையை அமைப்பின் நகரத் தலைவா் கமலக்கண்ணன் தலைமையில், மாவட்டச் செயலா் மணிகண்டன், ஒன்றியத் தலைவா் ராஜூ, ஒன்றியச் செயலா் குணசேகரன் ஆகியோா் முன்னிலையில் நிா்வாகிகள் தேரடி வீதியில் உள்ள ஓட்டைப் பிள்ளையாா் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டுசென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த விருத்தாசலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் மோகன், மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா் ஊா்வலத்துக்கு அனுமதியில்லை எனக் கூறி அவா்களை தடுத்தனா். இருப்பினும், இந்து முன்னணியினா் இருசக்கர வாகனத்தில் சிலையை வைத்து கொண்டுசெல்ல முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா், விநாயகா் சிலையை குறைந்த எண்ணிக்கையிலான நபா்கள் மட்டும் கொண்டுசென்று மங்கலம்பேட்டை பெரிய ஏரியில் கரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.