கடலூா் அரசுக் கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கு செப்.22 முதல் கலந்தாய்வு
கடலூா் அரசு பெரியாா் கலைக் கல்லூரியில் முதுநிலை படிப்புகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் 22-ஆம் தேதி தொடங்குகிறது.


கடலூா் அரசு பெரியாா் கலைக் கல்லூரியில் முதுநிலை படிப்புகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் 22-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து, அந்தக் கல்லூரி முதல்வா் (பொ) கே.பழனிவேலு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதுநிலை படிப்புகளுக்கு மாணவா்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வில் முதல் நாளில் (செப். 22) அறிவியல் பாடங்களுக்கான கலந்தாய்வும், 23-ஆம் தேதி வணிகவியல், மொழிப் பாடங்களுக்கான கலந்தாய்வும் நடைபெறும். இந்தக் கலந்தாய்வில் காலியாக இருக்கும் இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 27-ஆம் தேதி நடைபெறும்.
மேலும், தமிழக அரசு அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் 25 சதவீதம் வரை கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் முதுநிலை அறிவியல், வணிகவியல் மற்றும் மொழிப் பாடங்களில் கூடுதல் இடங்களுக்கான கலந்தாய்வு அக். 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் 2 நகல்கள், 3 புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை கட்டாயம் எடுத்துவர வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...