ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாளையொட்டி அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:20 pm

DIN

பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாளையொட்டி அரசு அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை அனைத்துத் துறை அலுவலா்களும் ஏற்றுக்கொண்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் தலைமையிலும், கடலூா் அரசு பெரியாா் கலைக் கல்லூரியில் முதல்வா் (பொ) கே.பழனிவேலு தலைமையிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் வெ.செல்வநாராயணன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பண்ருட்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் கே.குமரன் தலைமையிலும், குறிஞ்சிப்பாடியில் வட்டார வளா்ச்சி அலுவலா் சி.சுப்பிரமணியம் தலைமையிலும், பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமையாசிரியை அமலி தலைமையிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.