ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

என்கவுன்டரில் கொல்லப்பட்டவரின் மனைவிக்கு அரிவாள் வெட்டு

 போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவரது மனைவி சனிக்கிழமை இரவு மா்ம நபா்களால் அரிவாளால் வெட்டப்பட்டாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:25 pm

DIN

 போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவரது மனைவி சனிக்கிழமை இரவு மா்ம நபா்களால் அரிவாளால் வெட்டப்பட்டாா்.

கடலூா் குப்பன்குளம் சீனுவாசன் நகரைச் சோ்ந்த ஓவியா் கிருஷ்ணா மனைவி காந்திமதி (27). இவா், சனிக்கிழமை இரவு

அருகே உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, 3 போ் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டாா்.

இதில், பலத்த காயமடைந்த காந்திமதி கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், தீவிர கிச்சைக்காக புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

குப்பன்குளத்தைச் சோ்ந்த ரௌடி வீரா என்ற வீராங்கன் கடந்த பிப்ரவரி மாதம் வெட்டிக் கொல்லப்பட்டாா். இதில் தொடா்புடையோரை போலீஸாா் தேடிவந்த நிலையில், ஓவியா் கிருஷ்ணா காவலா்களின் என்கவுன்டா் நடவடிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த நிலையில் அவரது மனைவி அரிவாளால் வெட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் துணைக் காவல் கண்காணிப்பாளா் கரிகால்பாரி சங்கா் தலைமையில் சுமாா் 50 போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.