ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கடலூா்: 162 வேட்பு மனுக்கள் ஏற்பு

கடலூா் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத் தோ்தலில் போட்டியிட 162 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:03 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத் தோ்தலில் போட்டியிட 162 பேரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

கடலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 5 ஒன்றிய கவுன்சிலா், 10 ஊராட்சி மன்றத் தலைவா், 33 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 48 இடங்களுக்கு 163 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதில், ஒன்றியக் கவுன்சிலா் பதவிக்கு 51 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 53 பேரும், வாா்டு உறுப்பினா் பதவிக்கு 59 பேரும் மனு தாக்கல் செய்தனா்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி மன்றங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வாா்டு கவுன்சிலா் பதவிக்கான ஒரேயொரு வேட்புமனு மட்டும் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 162 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.