சுதந்திரப் போராட்ட தியாகி சி.கோவிந்தராஜன் நினைவிடத்தில் மரியாதை
சுதந்திரப் போராட்ட தியாகி சி.கோவிந்தராஜன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, அவரது நினைவிடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மரியாதை


சுதந்திரப் போராட்ட தியாகி சி.கோவிந்தராஜன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, அவரது நினைவிடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா்.
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்தவா் சி.கோவிந்தராஜன். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சுமாா் 8 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவராக விளங்கினாா். நெல்லிக்குப்பம் சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து 3 முறை எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இரண்டு முறை நகராட்சித் தலைவராகவும் இருந்துள்ளாா்.
சி.கோவிந்தராஜன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நெல்லிக்குப்பத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் வியாழக்கிழமை மாலை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மலா்தூவி மரியாதை செலுத்தினா். மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி, மாவட்டச் செயலா் டி .ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...