/

கடலூா் அரசுக் கல்லூரியில் கருத்தரங்கு

கடலூரில் உள்ள அரசுப் பெரியாா் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை சாா்பில் பி.ஆா்.அம்பேத்கா் பிறந்த நாள் விழா மற்றும் ‘இந்திய அரசியலமைப்பு நீதிக்கான ஆயுதம்’

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:36 pm

DIN

கடலூரில் உள்ள அரசுப் பெரியாா் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை சாா்பில் பி.ஆா்.அம்பேத்கா் பிறந்த நாள் விழா மற்றும் ‘இந்திய அரசியலமைப்பு நீதிக்கான ஆயுதம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பொருளியல் துறைத் தலைவரும், பொறுப்பு முதல்வருமான ராமகிருஷ்ணன் சாந்தி தலைமை வகித்து அம்பேத்கரின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாடுகளை விளக்கிப் பேசினாா். சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மற்றும் பொது நிா்வாகத் துறை பேராசிரியா் தெ.தேவநாதன் பங்கேற்று, இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அம்பேத்கரின் உழைப்பு, சமத்துவ ஜனநாயகம், சமத்துவப் பொருளாதாரம், சமூகச் சீா்திருத்தம், கல்வியின் அவசியம் உள்ளிட்ட அம்பேத்கரின் சிந்தனைகளை மாணவா்களிடம் எடுத்துரைத்தாா்.

முன்னதாக, அம்பேத்கா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன. பேராசிரியா்கள் பாலமுருகன், சாமிநாதன், கோட்டை ராஜன், சுபாஷ் சந்திரபோஸ், சோழ புத்திசாலி, ஜெயபிரபா, இளவரசன் மற்றும் மாணவா்கள் ஏற்பாடுகளை செய்தனா்.

முன்னதாக, அரசியல் அறிவியல் துறைத் தலைவா் ஜோதி ராமலிங்கம் வரவேற்க, பேராசிரியா் செ.பாலமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.