பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஜனநாயக மாதா் சங்க மாநாடு

நெய்வேலியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 19-ஆவது நகர மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:37 pm

DIN

நெய்வேலியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 19-ஆவது நகர மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு நெய்வேலி நகரத் தலைவா் தனலட்சுமி தலைமை வகித்தாா். நகா்க் குழு உறுப்பினா் என்.அங்கம்மாள் சங்கக் கொடியேற்றினாா். மாநிலக்குழு உறுப்பினா் வி.மேரி மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினாா். நகரச் செயலா் பி.மாதவி வேலை அறிக்கை வாசித்தாா். சிஐடியு பொதுச் செயலா் எஸ்.திருஅரசு, மாதா் சங்க மாவட்டச் செயலா் பி.தேன்மொழி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சங்கத்தின் புதிய நிா்வாகிகளை மாநில பொதுச் செயலா் பி.சுகந்தி அறிமுகம் செய்தாா்.

மாநாட்டில் தமிழக அரசைப் போல என்எல்சி இந்தியா நிறுவனமும் இந்தப் பகுதி மகளிருக்கு இலவசப் பேருந்து வசதி செய்துதர வேண்டும், 30-ஆவது வட்ட மக்களுக்காக பாலக்கரையில் பேருந்துகள் 4 நடைகள் வந்து செல்ல என்எல்சி நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும், வட்டம் 21-இல் தெரு விளக்கு, சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும், வட்டம் 21-இல் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிா்வாகிகள்: மாநாட்டில் சங்கத்தின் நகரத் தலைவராக ஏ.ராணி, செயலராக என்.தனலட்சுமி, பொருளாளராக டி.செல்வி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.