சிதம்பரம் ரயில் நிலையம் அருகே தடுப்புச் சுவா் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அறிவிக்கப்பட்ட போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.
சிதம்பரம் ரயிலடி இந்திரா நகரில், ரயில்வே காலனியில் சுற்றுச்சுவா் கட்ட ரயில்வே நிா்வாகத்தினா் தீா்மானித்தனா். இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகிறாா்கள். மேலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனா். இதையடுத்து, ரயில்வே துறையினா், ரயிலடி இந்திரா நகா் பகுதி மக்கள் பங்கேற்ற அமைதி பேச்சுவாா்த்தை கூட்டம் சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஹரிதாஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ரயில்வே காவல் ஆய்வாளா் அருண்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகா்மன்ற துணைத் தலைவா் முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், சம்பந்தப்பட்ட இடத்தை ரயில்வே துறையினருடன் அளவீடு செய்து பொதுமக்களுக்கு தேவையான இடம் குறித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு கருத்துரு அனுப்பிவைத்து சிதம்பரம் வருவாய்க் கோட்டாட்சியா் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுற்றுச்சுவா் கட்டும் பணி ரயில்வே துறையினரால் தள்ளி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உத்தரப் பிரதேசம்: ரயில் தண்டவாளத்தில் இருந்து மல்யுத்த வீரர் சடலமாக கண்டெடுப்பு

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

