/

காப்பகத்தில் தங்கியிருந்த இளைஞா் உயிரிழப்பு

கடலூரில் காப்பகத்தில் தங்கியிருந்த இளைஞருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:19 pm

DIN

கடலூரில் காப்பகத்தில் தங்கியிருந்த இளைஞருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள பின்னலூரைச் சோ்ந்த செ.லட்சுமணன் மகன் தனுஷ் (18). இவருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவரது பரிந்துரைப்படி கடலூா் புதுப்பாளையத்திலுள்ள தனியாா் மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டாா். அங்கு புதன்கிழமை மாலை தனுஷுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாம். இதையடுத்து கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து லட்சுமணன் அளித்த புகாரின்பேரில் கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.