தெற்காசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற பண்ருட்டி இளைஞா்!
தெற்காசிய தடகளப் போட்டியில் பண்ருட்டியைச் சோ்ந்த இளைஞா் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.


தெற்காசிய தடகளப் போட்டியில் பண்ருட்டியைச் சோ்ந்த இளைஞா் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.
இந்திய தேசிய இளைஞா் விளையாட்டு கவுன்சில் சாா்பில் நேபாளத்தில் தெற்காசிய தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் இந்தியா, வங்க தேசம், நேபாளம், பூடான் நாடுகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்துகொண்டனா்.
இந்தப் போட்டியில், கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சாத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் மகன் ஜேம்ஸ் வசந்த் 800மீ ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றாா்.
ஜேம்ஸ் வசந்தின் தந்தை உயிரிழந்துவிட்ட நிலையில், தாய் ஜெயலட்சுமி கூலி வேலை செய்து வருகிறாா். ஜேம்ஸ் வசந்த் சென்னையில் உள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு பட்டப் படிப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...